Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
    உளுந்தூர்பேட்டை வட்டம், ஆனத்தூர் காலனியைச் சேர்ந்தவர் சுப்புராயன் மகன் வெங்கடேசன். இவர், தனது வீட்டில் கழிப்பறை கட்டுவதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த கட்டையன் மகன் கிருஷ்ணன் (65) , மண்ணாங்கட்டி மகன் பலராமன் (48), காத்தவராயன் மகன் மணிகண்டன் (30) ஆகியோரை வைத்து பள்ளம் தோண்டினார்.
    மூவரும் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தபோது, அருகேயிருந்த தென்னை மரத்தில் ஒருவர் தேங்காய் குலைகளை வெட்டினார். அப்போது, எதிர்பாராதவிதமாக தேங்காய் குலை ஒன்று அருகேயிருந்த மின்கம்பி மீது விழுந்ததில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது.
    இதனால் கழிப்பறைக்காக பள்ளம் தோண்டிக்கொண்டிருந்த கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனர். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு, இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
    அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கிருஷ்ணன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மற்ற 2 பேரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து, கிருஷ்ணனின் சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில்  திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai