Enable Javscript for better performance
வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி பாமகவினர் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் பாமகவினர் தங்களது வீடுகளில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடியேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்காததைக் கண்டித்தும், உடனடியாக  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
    இருவேல்பட்டு கிராமத்தில் பாட்டாளி சமூக ஊடகப்  பேரவையின் மாவட்டச் செயலர் எல்.எஸ்.அரி  தலைமையில் பாமகவினர் தங்களது வீடுகளில்    கருப்புக் கொடியேற்றினர்.
    இதுபோல, உளுந்தூர்பேட்டை வட்டம், எம்.குன்னத்தூர், 
    பெரியசெவலை,  ஆனத்தூர், திருமூண்டிச்சரம், டி.கொள்தூர், 
    டி.புதுப்பாளையம் உள்பட தொகுதியில் உள்ள அனைத்து பாமகவினரும் தங்களது வீடுகளில் கருப்புக் கொடியேற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai