Enable Javscript for better performance
கடற்படை வீரரிடம் நிலம் மோசடி: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திண்டிவனம் அருகே கடற்படை வீரரிடம் நில மோசடி செய்ததாக ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
     வானூர் அருகே உள்ள உப்புவேலூர் கிராமத்தைச் சேர்ந்த வரதன் மகன் ஞானவேல் (45). இவர், கடற்படையில் பணியாற்றி வருகிறார். ஞானவேல் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி (55), அவரது மனைவி ஜானகி ஆகியோரிடம் இருந்து கடந்த 27.10.2016 அன்று உப்புவேலூரில் உள்ள சுமார் 18.41 ஏக்கர் நிலத்தை கிரையம் பெற்றுள்ளார்.
     பின்னர், இந்த நிலத்துக்கு பட்டா கோரி அந்தப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் ஞானவேல் விண்ணப்பித்துள்ளார். அப்போது, இந்த நிலம் வேறு ஒருவர் பெயரில் இருப்பது அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
     இதுகுறித்து விசாரித்ததில், அந்த நிலத்தை விற்பனை செய்வதில் முனியாண்டி, ஜானகி மற்றும் புதுக்குப்பம் தனசேகர், உப்புவேலூர் பார்த்தீபன், தளக்காணிக்குப்பம் வேலு ஆகியோர் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்ததாம். இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கும்.
     இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவில் ஞானவேல் புகார் அளித்தார்.
     இந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் எழிலரசி, உதவி ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலான போலீஸார் முனியாண்டி, ஜானகி உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, முனியாண்டியை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai