Enable Javscript for better performance
கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி செம்மேடு சர்க்கரை ஆலை முன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
     போராட்டத்துக்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ஆர்.குண்டுரெட்டியார் தலைமை வகித்தார். செயலர் தமிழரசன் முன்னிலை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.மாதவன், மாவட்டச் செயலர் முருகன், மாவட்டத் தலைவர் துரைராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் செஞ்சி வட்ட தலைவர் நெடுஞ்சேரலாதன்,திருவண்ணாமலை மாவட்டச் செயலர் பலராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், 2017-18-ஆம் அரவைப் பருவத்துக்கு விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்து 4 மாதங்கள் ஆகியும் பணம் வழங்கவில்லை. கரும்பு நிலுவை தொகையும் 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும். 21 ஆண்டுகளாக பணிபுரிந்த கரும்பு விவசாயிகளின் பிள்ளைகளுக்கு, ஆலையில் மீண்டும் அதே பணியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலை மட்ட கிளை செயலர் வரதராஜன் நன்றி கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai