Enable Javscript for better performance
காசநோய்த் தடுப்பு: தனியார் மருந்தகங்களுக்கு அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    காசநோய்த் தடுப்பு: தனியார் மருந்தகங்களுக்கு அறிவுரை

    By  விழுப்புரம்,  |   Published on : 18th May 2018 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் காச நோய்த் தடுப்புப் பணி குறித்து தனியார் மருந்தகங்களில் சுகாதாரக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
     இந்தியாவில் காச நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. தமிழகத்திலும் காச நோய் ஒழிப்பு பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், காச நோய் இல்லாத தமிழகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு, நோய்த் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
     காச நோய் பாதித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து, அதற்குரிய மருந்துகள் இலவசமாக 6 மாதங்கள் வழங்கப்படுகின்றன. இதனை முழுவதும் உட்கொண்டால் குணமாகிவிடலாம்.
     காச நோய் காற்றில் பரவும் தன்மை உடையது என்பதால், ஒருவரிடமிருந்து குடும்பத்தினர், குழந்தைகள் என பலருக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால், காச நோயாளர்களை கண்டறிந்து, காச நோய் தடுப்புப் பணியை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
     விழுப்புரம் மாவட்டத்தில் காசநோய் தடுப்புத் திட்டத்தின் மூலமாக காச நோயாளர்களை விடுபடாமல் கண்காணித்து சிகிச்சையளித்து நோய் பரவலை தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தனியார் மருந்தகங்களில் காச நோய் தொடர்பாக மருந்து வாங்க வரும் நோயாளர்கள் குறித்து தகவல் தெரிவிக்க அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     இந்தப் பணிகள் குறித்து விழுப்புரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகங்களில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் நேரு, காச நோய் பிரிவு துணை இயக்குநர் சுதாகர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். தனியார் மருந்தகங்களில் காசநோய்க்கு மருந்து வாங்கும் நபர்களின் பெயர், வயது, முகவரி மற்றும்
     தொலைபேசி எண் ஆகிய விவரங்களை தெரியப்படுத்திட வேண்டும். இதனடிப்படையில் மாவட்டத்திலுள்ள மொத்த காசநோயாளிகளின் எண்ணிக்கை தெரியவரும்.
     மேலும், கவனக்குறைவாக மருந்து உட்கொள்ளாமல் தவிர்த்து வரும் காச நோயாளர்களை நேரில் கண்டறிந்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனை மூலம் குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காச நோய் பரவலை தடுக்க முடியும். இவ்வாறு மருந்து வாங்குபவர்கள் குறித்து தகவல் தர மருந்தகங்கள் (மெடிக்கல்) தவறினால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினர்.
     இது குறித்த காசநோய் தடுப்புத் திட்டத்தின் சுற்றறிக்கை துண்டுப் பிரசுரங்களையும் குழுவினர் வழங்கினர். மருந்தக ஆய்வாளர் சுகுமாரன், காச நோய் தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai