Enable Javscript for better performance
கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு

    By  உளுந்தூர்பேட்டை  |   Published on : 18th May 2018 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
     இதில், உளுந்தூர்பேட்டை வட்டம் ஒலையனூர், சிறுவத்தூர், பரிக்கல், ஆரிநத்தம், செரத்தனூர், இருந்தை ஆகிய ஊராட்சிகளுக்கு கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதற்கான கடிதம் 79 பேருக்கு அனுப்பப்பட்டன. அதில் 62 பேர் தேர்வில் கலந்துகொண்டனர்.
     இவர்களுக்கு, எழுத்துத் தேர்வும், புத்தகத்தை படித்துக் காட்டும் தேர்வும் நடைபெற்றது. சைக்கிள் ஓட்டத்தெரிந்தால்தான் வேலை என்பதால் தேர்வில் கலந்து கொண்டவர்கள் சைக்கிள் ஓட்டி காண்பித்தனர்.
     நேர்முகத் தேர்வை உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட் சியர் எஸ்.பாலசுப்பிரமணியன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சசிகலா, மண்டல துணை வட்டாட்சியர்கள் சு.சங்கரலிங்கம், சற்குணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai