Enable Javscript for better performance
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் அளிப்பு

    By  விழுப்புரம்  |   Published on : 18th May 2018 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனம் சார்பில், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
     எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களை சாப்பிடுவது அவசியம். அதன்படி, எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கொண்ட பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனத்தில் நடைபெற்றது.
     இதில், விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்களை வழங்கினர். நிகழ்ச்சியில் ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் பிரசாத், ஆலோசகர் அசோக், ஐ.ஏ.பி.எஸ். அமைப்பின் திட்ட இயக்குநர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai