Enable Javscript for better performance
குழந்தைகளுக்கு வாழ்வியல் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கிராமங்களில் குழந்தைகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
     வேர்ல்டு விஷன் இந்தியா, செஞ்சி ஏடிபி அமைப்பு சார்பில் வல்லம், மேல்மலையனூர் ஒன்றியங்களில் 40 கிராமங்களில் குழந்தைகளுக்கான வாழ்வியல் பள்ளி பயிற்சி 5 நாள்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
     மகிழ்ச்சியான குடும்பம், மகிழ்ச்சியான உலகம் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை கிராமங்களில் செயல்படுத்தும் தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி செஞ்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது (படம்). இதில் 180 பெண் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேர்ல்டு விஷன் இந்தியா மற்றும் விடிவெள்ளி கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai