Enable Javscript for better performance
பயணி தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர்- Dinamani

சுடச்சுட

    

    பயணி தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர்

    By  கள்ளக்குறிச்சி  |   Published on : 18th May 2018 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பேருந்தில் பயணி தவறவிட்ட பணப் பையை காவல் துறையில் பத்திரமாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
     கள்ளக்குறிச்சியை அடுத்த எலவடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுடர்மணி (40). இவரது மனைவி நடராஜ். இவர் தனது பணப் பையுடன் செவ்வாய்க்கிழமை மாலை கள்ளக்குறிச்சியில் இருந்து நாககுப்பம் சென்ற அரசு நகரப் பேருந்தில் பயணித்தார்.
     பேருந்தின் ஓட்டுநராக திராவிடமணி, நடத்துநராக மனோகர் ஆகியோர் பணிபுரிந்தனர். நடராஜ் தனது ஊரான எலவடி வந்தவுடன் பேருந்தில் இருந்து கீழே இறங்கினார். அப்போது, அவர் பணப் பையை பேருந்திலேயே தவறவிட்டது தெரியவந்தது.
     சிறிது நேரம் கழித்து பேருந்து நடத்துநர் நடராஜ் அமர்ந்திருந்த இருக்கையின் கீழே மஞ்சள் நிற துணிப் பை இருந்ததைப் பார்த்தார். அந்தப் பையை திறந்து பார்த்தபோது பணம் திருந்தது தெரியவந்தது.
     இதையடுத்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பி.கணபதியிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த பையை பிரித்து பார்த்தபோது வங்கி கணக்குப் புத்தகம், ரொக்கம் ரூ.14,818 இருந்துள்ளது. அந்த பையில் இருந்த செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
     ஆனால், தொடர்பு கிடைக்காததால் போலீஸார் நடராஜ் வீட்டுக்கு நேரில் சென்று அவரை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு வந்தனர். பணப் பையை அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் நடராஜிடம் ஒப்படைத்தனர். இவர்களது நேர்மையை காவல் ஆய்வாளர் பாராட்டி வாழ்த்துதெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai