Enable Javscript for better performance
பிளஸ் 2 தேர்ச்சி: விழுப்புரம் ராமகிருஷ்ணா பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 தேர்ச்சி: விழுப்புரம் ராமகிருஷ்ணா பள்ளி சிறப்பிடம்

    By  விழுப்புரம்  |   Published on : 18th May 2018 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 2 தேர்ச்சி விழுப்புரம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
     விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 336 மாணவர்கள் நிகழாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில், 327 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 97.5 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்தனர்.
     இவர்களில், எஸ்.புனிதவதி, எஸ்.ஸ்ரீதர், ஜெயவிக்னேஷ்வரி, ஆர்.அபினேஷ்வர் ஆகிய மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதேபோல, 20 மாணவ, மாணவிகள் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தனர்.
     இயற்பியல், கணிதம், வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் பாடங்களில் 12 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். மேலும், விழுப்புரம் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களையும் இந்தப் பள்ளி மாணவர்கள் பெற்றிருந்தனர். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்த அனைத்து மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளியின் செயலர் கே.பழனிவேலு, பள்ளி முதல்வர் ஆர்.பாட்சா ஆகியோர் பாராட்டினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai