Enable Javscript for better performance
பிளஸ் 2: மவுண்ட் பார்க் பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2: மவுண்ட் பார்க் பள்ளி சிறப்பிடம்

    By  கள்ளக்குறிச்சி  |   Published on : 18th May 2018 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ்-2 தேர்வில் தியாகதுருகம் மவுண்ட் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
     இந்தப் பள்ளியில் இருந்து 734 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதியதில், 730 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 95.5 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். ஒருவர் 1,162 மதிப்பெண்கள் பெற்றார். இருவர் 1,152 மதிப்பெண்களும், இருவர் 1150 மதிப்பெண்களும் பெற்றனர். 1100-க்கு மேல் 61 பேரும், 1050-க்கு மேல் 154 பேரும், 1,000-க்கு மேல் 248 பேரும் மதிப்பெண்கள் பெற்றனர். இந்தப் பள்ளி மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக கணித பாடத்தில் அதிகளவில் 200 மதிப்பெண் பெற்றுசாதனை புரிந்துள்ளனர். இந்த ஆண்டு 21 பேர் கணிதப் பாடத்தில் 200 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சாதனை புரிந்துள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் இரா.மணிமாறன் பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளியின் முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai