Enable Javscript for better performance
மணல் கடத்தல்: 15 மாட்டு வண்டிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மணல் கடத்தல்: 15 மாட்டு வண்டிகள் பறிமுதல்

    By  உளுந்தூர்பேட்டை  |   Published on : 18th May 2018 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை வட்டம் ஷேசா நதியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 15 மாட்டு வண்டிகளை திருநாவலூர் போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
     விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், களவனூர் ஷேசா நதியில் அனுமதியின்றி மணல் கடத்தும் மாட்டு வண்டிகளை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் திருநாவலூர் போலீஸார் அந்த நதியில் ஆய்வு செய்தனர். அப்போது, அனுமதியின்றி மணல் அள்ளி கடத்தியதாக 15 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருக்கோவிலூர் சார்-ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai