Enable Javscript for better performance
மண் திருட்டு: லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மண் திருட்டு: லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

    By  விழுப்புரம்,  |   Published on : 18th May 2018 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கண்டமங்கலம் அருகே அரசு அனுமதியின்றி மண் திருடி கடத்த முயன்ற 2 லாரிகள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
     கண்டமங்கலத்தை அடுத்த கெண்டியாங்குப்பம் ஆளில்லாத ரயில்வே கடவுப்பாதை அருகே அனுமதியன்றி சூளைக்கு மண் அள்ளப்படுவதாக மணல் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு வியாழக்கிழமை காலை தகவல் கிடைத்தது.
     இதையடுத்து, அங்கு சென்ற மணல் கடத்தல் தடுப்பு சிறப்பு தனிப்படை காவல் ஆய்வாளர் மூர்த்தி தலைமையிலான போலீஸார், மண் திருட்டில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வைக்க முயன்றனர். ஆனால், போலீஸாரைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பின்னர், அங்கிருந்த 2 லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, கண்டமங்கலம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
     இது தொடர்பாக, கண்டமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai