Enable Javscript for better performance
மே 22-இல் பள்ளி வாகனங்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மோட்டார் வாகன விதிகளுக்கு உள்பட்டு பள்ளி வாகனங்களை இயக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்துறை அலுவலர்கள் விழுப்புரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
     இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     பள்ளி வாகனத்தில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகளின் கீழ் பள்ளிப் பேருந்துகள் இயக்கப்படுகிறதா என விழுப்புரம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட எஸ்.பி. முன்னிலையில், கோட்டாட்சியர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், டிஎஸ்பி ஆகியோர அடங்கிய பல்துறை அலுவலர்கள் குழு வரும் செவ்வாய்க்கிழமை (மே 22) பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்ய உள்ளனர்.
     பள்ளி வாகன உரிமையாளர்கள், தாளாளர்கள் தங்களது பள்ளி வாகனங்களை செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் விழுப்புரம், பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவலர் மைதானத்தில் நடைபெறும் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai