சுடச்சுட

  

  கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விழுப்புரம், வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
   இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கும், இரவு 10 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல, மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரத்துக்கு நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பகல் ஒரு மணிக்கும், நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அந்தம்பள்ளம், தண்டரை ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.
   இதேபோல, வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரவு 9.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து வேலூருக்கு நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai