சமுதாய வளைகாப்பு விழா

செஞ்சி வட்டம், வல்லம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், தேசிய சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செஞ்சி வட்டம், வல்லம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், தேசிய சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுபைதுன்னிசா வரவேற்றார். மேற்பார்வையாளர்கள் ராஜகுமாரி, உமா தேவி, மரியசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் ஆனந்தி அண்ணாதுரை குத்துவிளக்கை ஏற்றி விழாவைத் தொடக்கிவைத்தார். நேதாஜி இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் அகலூர் ஏ.ஜோலாதாஸ், கிராம செவிலியர் ஜெயந்தி, சுகாதார மேற்பார்வையாளர் ரீத்தா, மகளிர் ஊர் நல அலுவலர் விஜயா, சமூக நல விரிவாக்க அலுவலர் வள்ளி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
வல்லம் வட்டாரக் கிராமங்களில் இருந்து வந்த 120 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 9 வகையான சாதம், நலங்கு வைத்தல், பூ அலங்காரம் செய்து, 9 வகையான சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மேலும், பிரசவத்துக்கு முன், பின் உள்கொள்ள வேண்டிய சத்துள்ள உணவு முறைகள், உடல் பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் அங்கன்வாடி பணியாளர்கள் மலர்விழி, சரளா, ஜெயந்தி, விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com