ரஃபேல் போர் விமான ஊழலைக் கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியாகப் புறப்பட்டனர். முன்னாள் எம்.பி. கே.ராணி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் 
கே.சிரஞ்சீவி பேரணியைத் தொடக்கிவைத்து பேசினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பேரணி நிறைவடைந்தது. பின்னர், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ஆர்.டி.வி.சீனுவாசக்குமார், ஆர்.பி.ரமேஷ், பி.எஸ்.
ஜெயகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏக்கள் டி.என்.முருகானந்தம், சிவராமன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன்மௌலானா, இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயல்ர ஜெபிமேகர் உள்ளிட்டோர் 
பேசினர்.
மோடி தலைமையிலான பாஜக அரசில் 36 ரஃபேல் போர் விமானங்கள் ரூ.60,145 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு விமானத்தை  ரூ.1,670 கோடிக்கு வாங்கியுள்ளனர். பிற நாடுகள் இந்த விமானத்தை வாங்கிய விலையோடு ஒப்பிடுகையில், ஒரு விமானத்துக்கு ரூ.350 கோடி கூடுதலாக கொடுத்துள்ளனர்.
இந்த ஊழல் குறித்த விமர்சனங்களுக்கு பாஜக அரசு பதிலளிக்கவில்லை. விலையை வெளியிடக் கூடாது என்ற சட்டப் பிரிவைக் கூறி மத்திய அரசும், பாதுகாப்புத் துறையும் தவறான தகவல்களை வழங்கி வருகிறது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கட்சியின் அகில இந்திய உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, பொருளாளர் டி.தயானந்தம், மாநில பொதுக் குழு உறுப்பினர் செ.சிவா, சுரேஷ்ராம், நகரத் தலைவர் செல்வராஜ்,  மாவட்ட துணைத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார், நாராயணசாமி, குப்பன், பொதுச் செயலர்கள் விஸ்வநாதன், ராஜேஷ், புருஷோத்தமன், மகளிர் காங்கிரஸ் தலைவர் மேகேஸ்வரி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம், சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவர் வாசிம்ராஜா, தன்சிங், வட்டத் தலைவர்கள் அன்பு,  ராதா, காசிநாதன், ஏழுமலை, கதிர்வேல், அண்ணாமலை, சாதூல்கான், ஏழுமலை, வெங்கடேஷ், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனை சந்தித்து, ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக குடியரசுத் தலைவர் மூலம் விசாரணை நடத்தி மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸார் புகார் மனுவை அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com