ஆர்.கே.எஸ். கல்லூரி ஆண்டு விழா

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆர்.கே.சண்முகம் கல்வியியல் கல்லூரி, இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளின் ஆண்டு விழா காமராசர் கூட்ட அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆர்.கே.சண்முகம் கல்வியியல் கல்லூரி, இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளின் ஆண்டு விழா காமராசர் கூட்ட அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ச.நேரு தலைமை வகித்தார். கல்லூரியின் தலைவர் க.மகுடமுடி,தாளாளர் ஜி.எஸ்.குமார், செயலாளர் என்.கோவிந்தராஜு, பொருளாளர் அ.தமிழ்மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஹெல்த் சயின்ஸ் ஒருங்கிணைப்பாளர் என்.ஆழ்வார் வரவேற்றார். கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜி.ஜெயசீலன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி பங்கேற்று பேசுகையில், மாணவர்கள் வெற்றியடைய கல்வி ஒன்றே ஆயுதம் என்றார்.
கல்லூரியின் நிர்வாகிகள் தே.மணிவண்ணன், திருஞானசம்பந்தம், ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர்கள் சண்முகம், விஜயகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். 
முன்னதாக, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியை டி.துர்காதேவி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com