பெருமாள், ஆஞ்சநேயர் கோயில்களில் ராம நவமி வழிபாடு

பெருமாள், ஆஞ்சநேயர் கோயில்களில் ராம நவமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

பெருமாள், ஆஞ்சநேயர் கோயில்களில் ராம நவமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இரவு சிறப்பு மலர் அலங்காரத்தில்  சீதை, லட்சுமணர் ஆகியோருடன் கோதண்டராமராக பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
செஞ்சி: செஞ்சி அருகே அவலூர்பேட்டை பெத்தான் குளக்கரையின் மேற்கே ராம பக்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. 
ராம நவமியையொட்டி, இந்தக் கோயிலில் சனிக்கிழமை காலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, சீதாராமர், ஆஞ்சநேயர் படங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், வீதியுலா நடைபெற்றது.
இதேபோன்று, ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமியையொட்டி, சிறப்பு திருமஞ்சன அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
ஸ்ரீகோதண்டராமர் கோயில்: செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை அருகே அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் பங்குனி மாத ஸ்ரீராம பஜனை, ஸ்ரீராம நவமி வழிபாடு ஆகியவை நடைபெற்றன.
இதையொட்டி, கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம், மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. பின்னர், ஸ்ரீராம பஜனை நடைபெற்றது. இதில்,  திருமால் வணக்கம் பாடப்பட்டது. 
ஸ்ரீகோதண்டராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகி துரை.பாரதிராஜா முன்னிலை வகித்தார். ஜெயராமதேசிகர் தலைமை வகித்தார். ஜனார்த்தன தேசிகர் தலைமையுரையாற்றினார்.
சி.எட்டியாப்பிள்ளை, பி.சாமிக்கன்னு, பெருமாள் செட்டியார், அருணகிரி, அப்புபிள்ளை, ராமு உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இதில், நடுப்பட்டு, கொங்கரப்பட்டு, மொடையூர், என்.ஆர்.பேட்டை, சிட்டாம்பூண்டி, தூரம்பூண்டி, தேவதானம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com