சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலையொட்டி விழுப்புரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புக் காவல் படையினர் திங்கள்கிழமை மாலை கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
  பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உணர்த்தும் விதமாகவும், தேர்தலை சீர்குலைக்கும் எண்ணமுள்ளவர்கள் மீது கடும் நடடிக்கை எடுக்கப்படும் என்பதை எச்சரிக்கும் விதமாகவும் இந்த கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.
  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் திருமால் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு காவல் படையினர், காவல்துறையினர் பங்கேற்றனர். இதில் கவச உடை அணிந்தும் போலீஸார் பங்கேற்றனர்.
  ரயிலடியில் தொடங்கிய கொடி அணி வகுப்பு ஊர்வலம் நேருஜி சாலை, பழைய பேருந்து நிலையம், நான்கு முனை சிக்னல், திருச்சி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் உள்ளே வந்து, வீரன் கோயில் சிக்னல் பகுதியில் நிறைவடைந்தது.
  கொடி அணி வகுப்பு ஊர்வலத்தில் விழுப்புரம் நகர காவல் ஆய்வாளர் ராபின்சன், தனிப்
  பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள சிறப்பு காவல் படையினர் திங்கள்கிழமை மாலை 
  கச்சிராயப்பாளையம் பகுதியில் முக்கிய சாலைகளின் வழியாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ந.ராமநாதன்தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. சிறப்புக் காவல் படை ஆய்வாளர் நாகேந்திரசாமி, கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் செ.வள்ளி , கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்க.விஜயகுமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai