சுடச்சுட

  

  கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பொன்.கௌதமசிகாமணி திங்கள்கிழமை காலை கள்ளக்குறிச்சி நகரில் உள்ள உழவர்சந்தையில் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். பின்னர், சின்னசேலம், ராயப்பனூர், மேல்நாரியப்பனூர், உலகங்காத்தான், நீலமங்கலம்  உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வேட்பாளர் பொன்.கௌதமசிகாமணி வாக்கு சேகரித்தார்.
  திமுக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் ஆ.அங்கையர்க்கண்ணி, சங்கராபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் 
  தா.உதயசூரியன், மாவட்ட அவைத் தலைவர் கே.ராமமூர்த்தி ஒன்றியச் செயலாளர் சி.வெங்கடாசலம், மாவட்ட துணைச் செயலாளர் பி.காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெ.செல்வநாயகம் ஆகியோர் உடன் சென்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai