இலங்கை குண்டுவெடிப்பு: மனித உரிமைகள் கழகம் கண்டனம்
By DIN | Published On : 22nd April 2019 09:43 AM | Last Updated : 22nd April 2019 09:43 AM | அ+அ அ- |

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மனித உரிமைகள் கழகம் கண்டனம் தெரிவித்தது.
இந்தக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட துணைச் செயலர் தங்கையா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் குமார், நாதமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைஞர் அணி செயலர் பால்சுந்தர் வரவேற்றார். மாநிலத் துணைப் பொதுச் செயலர் கந்தன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். நகர துணைச் செயலர் குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நெகிழிப் பை
பயன்பாட்டுக்கு தமிழக அரசு விதித்த தடையை பயன்படுத்தி, நெகிழிக்கு மாற்றாக இருக்கும் பைகளை வழங்க கடைக்காரர்கள் கூடுதல் பணம் வசூலிக்கிறார்கள். எனவே, இலவசமாக பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் இருந்து தூசி பறப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதை முறைப்படுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.