Enable Javscript for better performance
ஆடிப்பெருக்கு: கோயில்களில் சிறப்பு உத்ஸவம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்

    ஆடிப்பெருக்கு: கோயில்களில் சிறப்பு உத்ஸவம்

    By DIN  |   Published On : 04th August 2019 01:44 AM  |   Last Updated : 04th August 2019 01:44 AM  |  அ+அ அ-  |  


    ஆடிப்பெருக்கையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு உத்ஸவங்கள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
    மயிலம் அருகே செண்டூரில் விவசாயிகள் சார்பில், சனிக்கிழமை ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, மயிலம் மலைக்கோயிலில் இருந்து வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியரை ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றங்கரையில் உள்ள தோப்பில் வைத்து சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். பின்னர், ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
    மாலை 5 மணிக்கு பல்லக்கில் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, திரளான பக்தர்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு படையலிட்டனர். விழுப்புரம் எடத்தெரு ஏழை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பூஜையில்,  அம்மனுக்கு வளையல் அணிவிக்கப்பட்டது. பின்னர், சிங்க வாகனத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் பிரஹந்நாயகி அம்மனுக்கு வளையல்கள், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் ஆண்டாள், பெருமாள் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
    பாணாம்பட்டு முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகளும், வளையல் அணிவித்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் தர்மகர்த்தா பாவாடை தலைமையில், பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். விக்கிரவாண்டி சிவன் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, புவனேஷ்வரி அம்மன் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
    கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் புக்குளம் சாலையில் பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 10 அடி உயரமுள்ள புற்றுக்கும், மூலவர் பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பிற்பகலில் கோயில் அருகே உள்ள குளக்கரையில் உத்ஸவர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் கோயிலைச் சுற்றி வலம் வந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு பெரியநாயகி அம்மனுக்கு கருவாடு, சுருட்டு உள்ளிட்டவற்றுடன் படையல் வைக்கப்பட்டு, பூஜை நடைபெற்றது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp