முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
குடிநீர் கேன் விநியோகஸ்தர்கள் நலச் சங்க தொடக்க விழா
By DIN | Published On : 04th August 2019 01:45 AM | Last Updated : 04th August 2019 01:45 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் விநியோகஸ்தர்கள் நலச் சங்கத்தின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.மின்னல்சவுக் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் பி.செல்வக்குமார், செயலர் ஜெ.நடராஜன், பொருளாளர் கே.ராஜசேகரன், துணைத் தலைவர் கே.ஜனார்த்தனன், துணைச் செயலர் வி.சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தை தொடக்கிவைத்து மாநிலத் தலைவர் ஜி.மஞ்சுநாதன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யும் சங்கத்தினருக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்படும். சங்கத்தின் சந்தா தொகையை தேசிய வங்கியில் செலுத்தி, அதன் மூலம் சங்கத்தினருக்கு தொழில் தொடங்க கடன் உதவி பெற்றுத்தரப்படும்.
சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு அட்டை வழங்கப்படும். சங்கத்தினரின் குடும்ப விழா, துக்க நிகழ்வுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும். பொதுமக்களுக்கு தரமான குடிநீர் வழங்கவும், உரிய விலையில் குடிநீர் கேன்களை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், குடிநீர் கேன் விநியோக நலச் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். எம்.எஸ்.ராம் நன்றி கூறினார்.