முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 04th August 2019 01:45 AM | Last Updated : 04th August 2019 01:45 AM | அ+அ அ- |

மயிலம் அருகே பாதிராப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலம் காவல் துறை சார்பில், பாதிராப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு மன்றம் தொடக்கம் மற்றும் போக்குவரத்து விதிகள், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெருகி வரும் பாலியல் குற்றங்களைத் தடுத்தல் மற்றும் அதற்கான சட்டங்களை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திண்டிவனம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (பயிற்சி) யுவப்பிரியா தலைமை வகித்தார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தார்.
மயிலம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்பாபு, உதவி ஆய்வாளர் நந்தகுமார் ஆகியோர் குழந்தை திருமணம் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினர். பின்னர், சாலைப் பாதுகாப்பு மன்றம் தொடக்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு, காவல் துறையினரிடம் சட்டங்கள் குறித்த சந்தேகங்களைக் கேட்டு தெரிந்துகொண்டனர்.