முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 04th August 2019 01:46 AM | Last Updated : 04th August 2019 01:46 AM | அ+அ அ- |

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறை மற்றும் காவல் துறை சார்பில் இந்தப் பேரணி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் தொடக்கிவைத்தார்.
விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமால் முன்னிலை வகித்தார்.
பேரணியானது ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து திருச்சி சாலை, நேருஜி சாலைகளின் வழியே சென்று, விழுப்புரம் நான்கு முனை சாலை சந்திப்பில் முடிவடைந்தது.
இதில், பள்ளி ஆசிரியர்கள், காவல் துறையினர், மாணவ, மாணவிகள் பங்கேற்று பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் சட்டப் பிரிவுகள், புகார் அளிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண் 1098 உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இளம் செஞ்சிலுவை மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ம.பாபுசெல்வதுரை, காவல் ஆய்வாளர் பிரேமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.