Enable Javscript for better performance
கோயில் விழாவில் மோதல்: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் சாலாமேடு பகுதியில் கோயில் விழா மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விழுப்புரம்  சாலாமேடு பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.  அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (48) என்பவர்,  தெருவில் உள்ள மின்விளக்கின் சுவிட்சை போடச் சென்றார்.  அப்போது அங்கு வந்த, விழுப்புரம் மருதூரைச் சேர்ந்த விக்கி(21), அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ் (23), சாலாமேடைச் சேர்ந்த சுகுமார்(25) ஆகியோர்,  "எதற்காக மின்விளக்கை போடுகிறீர்கள்' எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், அவர்கள் 3 பேரும் சேர்ந்து பழனிவேலை சரமாரியாக தாக்கினராம்.
    இதில் பலத்த காயமடைந்த பழனிவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதனைத் தொடர்ந்து பழனிவேல் அளித்த புகாரின் பேரில்,  
    விழுப்புரம் தாலுகா போலீஸார் ரமேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai