ஓய்வூதியர் கூட்டமைப்புக் கூட்டம்

விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பின் மாவட்டக் கூட்டம் வி.ஆர்.பி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  

விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பின் மாவட்டக் கூட்டம் வி.ஆர்.பி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  
மாவட்டத் தலைவர் சு.கண்ணன் தலைமை வகித்தார்.  துணைத் தலைவர் குக.சரவணன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ப.ஆனந்தன் வரவேற்றார்.  மாவட்டச் செயலர் அ.சுருளிமலை ஆண்டு அறிக்கை வாசித்தார்.  பொருளாளர் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்தார்.
மாநில துணைத் தலைவர் ராமு.சிதம்பரம் சிறப்புரையாற்றினார். மாநில பிரதிநிதி ஏ.ஆர்.பாண்டுரங்கன், பழனிச்சாமி,  ராமமூர்த்தி,  வி.ஆறுமுகம், முன்னாள் மாவட்டச் செயலர் விவேகானந்தன், துணைச் செயலர் ராசகோபால்,  கோவிந்தராசு, தண்டபாணி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
தீர்மானங்கள்: 
குடிநீர் பிரச்னையை சமாளிக்கும் வகையில், வீடுகள் தோறும் மழைக் காலங்களில் மழை நீரை சேமிக்கும் தொட்டிகளை அமைக்க பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,  நீர்நிலை இயற்கை வளங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டும்.
விண்வெளி ஆய்வுத் துறையில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி சாதித்த இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோரை பாராட்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com