கம்பன் விழாவில் பட்டிமன்றம்

விழுப்புரத்தில் கம்பன் விழா நிறைவு நாளில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் கம்பன் விழா நிறைவு நாளில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் நடைபெற்றது.
விழுப்புரம் கம்பன் கழகம் சார்பில், 36-ஆவது ஆண்டு கம்பன் விழா வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 
 விழுப்புரம் தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவின் மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை,  முதல் நூலும்,  முதன்மை நூலும் என்ற பொருளில்,  பாரதி கிருஷ்ணகுமாரின் தனியுரை இடம்பெற்றது. இதற்கு கோ.வெங்கடேசன் தலைமை வகித்தார்.  
தொடர்ந்து,  கம்பன் காட்டும் அறநெறிகள் போற்றப்படுகிறதா... புறக்கணிக்கப்படுகிறதா.. என்ற தலைப்பில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது. 
 விழுப்புரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் இரா.ஜனகராஜ் தலைமை வகித்தார். பட்டிமன்ற நடுவராக பேராசிரியர் சாலமன் பாப்பையா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.  
போற்றப்படுகிறது என்ற கருத்தை வே.சங்கரநாராயணன்,  தமிழரசி செந்தில்குமார், ஆர்.ராஜ்குமார் ஆகியோர் வாதிட்டு வழங்கினர். புறக்கணிக்கப்படுகிறது என்ற கருத்தை புலவர் மா.ராமலிங்கம், கவிதா ஜவகர், பேராசிரியர் சா.நீலகண்டன் ஆகியோர் வாதிட்டு வழங்கினர்.  கம்பன் கழகச் செயலர் மு.க.சங்கரன் தொகுத்து வழங்கினார்.  நிகழ்ச்சியில் கம்பன் கழகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com