பனை விதைகளை நடும் தன்னார்வலர்கள்

விழுப்புரம் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் இளைஞர் தன்னார்வலர் குழுவினர் பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர்.

விழுப்புரம் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் இளைஞர் தன்னார்வலர் குழுவினர் பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர்.
 இந்தக் குழுவினர், "மரக்கன்று நடுவோம் - மழை பெறுவோம் -  நீர்நிலைகளைப் பாதுகாப்போம்' என வலியுறுத்தி மரக் கன்றுகளை நடவு செய்து வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக மலட்டாறு,  அதையொட்டிய ஏரி, குளங்கள், வாய்க்கால்களில்  மரக்கன்றுகளை தற்போது நட்டு வருகின்றனர்.  மேலும், 5,000 பனை மர விதைகளை  நடும் பணியையும் தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். இருவேல்பட்டு கிராமத்தில் மலட்டாறு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பனை விதைகளை நடவு செய்தனர். 
 இளைஞர் தன்னார்வலர் குழுவைச் சேர்ந்த மாணிக்கம், எஸ்.ஹரி, சூர்யா, தேசிங்கு, தமிழ், சுரேஷ், மாதவன், அஜித் உள்ளிட்ட மாணவர்கள், இளைஞர்கள் குழுவினர் பங்கேற்று 1,000 பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் அண்மையில் அந்தப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் 250 பனை விதைகளை நடவு செய்தனர். இவர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com