Enable Javscript for better performance
திண்டிவனம் அருகே  ரயிலிலிருந்து கீழே தள்ளி விருத்தாசலம் இளைஞர் கொலை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    திண்டிவனம் அருகே  ரயிலிலிருந்து கீழே தள்ளி விருத்தாசலம் இளைஞர் கொலை

    By DIN  |   Published On : 06th August 2019 07:35 AM  |   Last Updated : 06th August 2019 07:35 AM  |  அ+அ அ-  |  

    திண்டிவனம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு விரைவு ரயிலிலிருந்து கீழே விழுந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். ரயிலில் ஏற்பட்ட தகராறில் அவரைத் தள்ளிவிட்டு கொலை செய்ததாக, உடன் வந்த மதுரை இளைஞரை   செங்கல்பட்டு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சி அந்தேரி மேடு பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி மகன் உமாநாத் (28) . சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
    இவர் சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து விருத்தாசலம் செல்வதற்காக,  "ராக்போர்ட்' விரைவு ரயிலில் புறப்பட்டு வந்தார். நள்ளிரவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரயில் நிலையத்தைக் கடந்து பேரணி மேம்பாலம் அருகே வந்த அந்த ரயிலில் இருந்து உமாநாத்  தவறி கீழே விழுந்தார். இதுகுறித்து சக பயணிகள், விழுப்புரம் ரயில் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
     ரயில் விழுப்புரம் வந்ததும், ரயிலில் உமாநாத்திடம் தகராறு செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பிடித்து, சக பயணிகள் விழுப்புரம் ரயில்வே போலீஸில் ஒப்படைத்தனர்.
    இதனிடையே, மேம்பாலம் பகுதியில் ரயிலிலிருந்து தவறி விழுந்த உமாநாத்தை உயிரிழந்த நிலையில் சடலமாக பெரியதச்சூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீட்டனர். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் தலைமையில் செங்கல்பட்டு இருப்புப்பாதை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். ரயிலிலிருந்து விழுந்தது உமாநாத்தான் என்பதை, அவரது உறவினர்கள் நேரில் பார்த்து உறுதி செய்தனர். உமாநாத்தின் சடலம் உடல் கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
    இந்த சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞரிடம் போலீஸார் விசாரித்தனர். அதில், அவர் மதுரையைச் சேர்ந்த முத்தரசன் என்பதும், அவர் உமாநாத்துடன் தகராறு செய்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக செங்கல்பட்டு இருப்புப்பாதை போலீஸார் முத்தரசனை திங்கள்கிழமை கைது செய்து, செங்கல்பட்டுக்கு அழைத்துச் சென்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp