சுடச்சுட

  

  கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஒன்றியங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் பயிலும் 2,923 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
  கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் எம்.பாபு தலைமை வகித்தார். மாநில சர்க்கரை இணையத் தலைவர் எ.எஸ்.ஏ.
  ராஜசேகர், சி.எம்.எஸ். வங்கியின் தலைவர் எஸ்.பச்சையாப்பிள்ளை, கூட்டுறவு வங்கித் தலைவர் 
  அ.ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் ப.ராமச்சந்திரன் வரவேற்றார்.
  சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு கலந்துகொண்டு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும்  736 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசினார்.
  நிகழ்ச்சியில் பெற்றோர் - ஆசிரியர் கழக இயக்குநர்கள் சர்புதீன், புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  இதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பெற்றோர் - ஆசிரியர் கழக துணைத் தலைவர் ஒய்.அப்துல்
  கரீம் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை மார்கிரேட் வரவேற்றார். 
  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எம்.எல்.ஏ. அ.பிரபு, பிளஸ் 1, பிளஸ் 2  பயிலும் 1,050 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் செந்தில்குமார், சீனுவாசன், குட்டி, கோபி உள்பட பலர் பங்கேற்றனர்.
  முன்னதாக, இந்தப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க எம்.எல்.ஏ. அ.பிரபு வந்தபோது, அவரிடம் இந்தப் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவிகள், தங்களுக்கு இன்னும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை என முறையிட்டனர். 
  அதற்கு, ஓரிரு மாதங்களில் விலையில்லா மடிக்கணினிகளை வழங்க ஏற்பாடு செய்வதாக எம்எல்ஏ தெரிவித்தார்.
  இதேபோல, குதிரைச்சந்தல் பள்ளியில் 178, தாகம்தீர்த்தாபுரம் பள்ளியில் 115, கூகையூர் பள்ளியில் 248, நைனார்பாளையம் பள்ளியில் 596 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai