சுடச்சுட

  

  திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் கிராமத்தில் ரூ.17.40 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பள்ளிக்கட்டடப் பணியை க.பொன்முடி எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தார்.
  செம்மார் கிராமத்தில் திருக்கோவிலூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் க.பொன்முடி வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3.30 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட, கரும காரிய கொட்டகை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதை க. பொன்முடி திறந்து வைத்தார். 
  இதையடுத்து, ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில்,  அனைவருக்கும் கல்வித் திட்டம் நிதி மூலம்  ரூ.17.40 லட்சம் செலவில் நடைபெறும் கட்டடப் பணியையும்,  அந்தப் பள்ளியில் நடைபெறும் ஸ்மார்ட் வகுப்பறையையும் க.பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
  அப்போது,  பள்ளி மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியின் போது,  திமுக ஒன்றியச் செயலர் விசுவநாதன், திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், அண்ணாதுரை, பொறியாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர்உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai