சுடச்சுட

  

  விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளரான வி.வி. திருமால்  குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
  நாடு முழுவதும் சிறப்பாகப் பணிபுரியும் காவல் துறை அதிகாரிகளுக்கு, ஆண்டு தோறும் மத்திய அரசு குடியரசுத் தலைவர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. 
  இந்த வகையில்,  நிகழாண்டும் சுதந்திர தின விழாவையொட்டி,  காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்குவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
  தமிழகத்தில் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விழுப்புரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக உள்ள வி.வி.திருமால் தேர்வு செய்யப்பட்டார். கடந்தாண்டு திண்டிவனம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றியமைக்காக, 
  அவருக்கு  குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படவுள்ளது.
  திண்டிவனத்தில் திருட்டு,  கொள்ளை சம்பவங்களைத் தடுக்கும் விதமாக,  நகரின் முக்கியச் சாலை சந்திப்புகள்,  குடியிருப்புப் பகுதிகள் என மொத்தம் 350 இடங்களில் சிசிடிவி கேமரா வைத்து, அதனை போலீஸார், கண்காணிக்கும் விதமாக சிறப்பான பணியை மேற்கொண்டதுடன், சட்டம்-ஒழுங்கு பிரச்னை தீர்க்கவும் சிறப்பாகப் பணியாற்றி பாராட்டைப் பெற்றார்.
  புது தில்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் விருதை பெறவுள்ள துணை கண்காணிப்பாளர் வி.வி.திருமாலுக்கு,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள்,  காவல் துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai