சுதந்திர தின பாதுகாப்பு சோதனை: 1,275 வழக்குகள் பதிவு: 62 பேர் கைது

சுதந்திர தினத்தையொட்டி  விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற

சுதந்திர தினத்தையொட்டி  விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சோதனையில் 1,275 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 62 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். 
விழுப்புரம் மாவட்டத்தில் "ஸ்டாமிங் ஆபரேஷன்' என்ற பெயரில் 
செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை அதிகாலை 2 மணி வரை,  காவல் துறையினர் ஒரே நேரத்தில் தீவிர வாகனச் சோதனை நடத்தினர்.  இரவு 10 மணிக்கு விழுப்புரத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகள்,  முக்கிய சாலை சந்திப்புகள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
இதில்,  மாவட்டத்தில் மொத்தமுள்ள 158 தங்கும் விடுதிகளில் 109 விடுதிகளில் சோதனையிடப்பட்டது.  வாகனச் சோதனையின் போது,  2,423 வாகனங்களை நிறுத்தி சோதனையிடப்பட்டது.  இதில், மது அருந்தி வாகனம் ஓட்டிய 70 பேர் மீதும்,  அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 85 பேர் மீதும்,  இதர விதிமீறல்களில் ஈடுபட்டதாக 1,120 பேர் மீதும் என்று,  மொத்தம் 1,275 வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும்,  பழைய குற்றவாளிகள் பட்டியலில் உள்ள150 வீடுகளில் சோதனை நடத்தி,  அவர்களது நடவடிக்கை  கண்காணிக்கப்பட்டது. கொலை குற்றத்தில் தொடர்புடைய 151 பேரின் நடவடிக்கையும் சோதனையில் கண்காணிக்கப்பட்டது.  மாவட்டத்தில் 855 வங்கிகளில் நேரில் சென்று, இரவுப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்ற வழக்குகளில் தொடர்புடைய 62 பேர் கைது செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com