செல்லம்பட்டு ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

சின்னசேலம் அருகேயுள்ள செல்லம்பட்டில் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 

சின்னசேலம் அருகேயுள்ள செல்லம்பட்டில் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கோயிலில் கடந்த ஆக.6ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. 
கள்ளக்குறிச்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவரும், மாநில சர்க்கரை இணையத் தலைவருமான ஏ.எஸ்.ஏ.ராஜசேகர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
முன்னதாக, கடந்த 9 ஆம் தேதி பால்குடம் எடுத்தல், 10ஆம் தேதி சனிக்கிழமை மாவிளக்கு பூஜை, 11 ஆம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, அன்னதானம் நடைபெற்றது.  
12ஆம் தேதி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. 13ஆம் தேதி காத்தவராயன் ஆரியமாலை திருக்கல்யாணம், சின்னான் மோடி எடுத்தல், அம்மனுக்கு அக்னிசட்டி, அலகு குத்தி, கூழ்வார்த்தல் நடைபெற்றது. மதியம் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். 
வியாழக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுவிழா நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com