பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக் கடை கட்டடம்!

தியாகதுருகம் ஒன்றியம், சு.ஒகையூர் ஊராட்சிக்கு உள்பட்ட சுப்பிரமணியபுரத்தில், கூடுதல் பொது விநியோகக் கடை

தியாகதுருகம் ஒன்றியம், சு.ஒகையூர் ஊராட்சிக்கு உள்பட்ட சுப்பிரமணியபுரத்தில், கூடுதல் பொது விநியோகக் கடை கட்டடம் கட்டப்பட்டு 8 ஆண்டுகளாகியும் பூட்டியே கிடக்கிறது. இந்தக் கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சுப்பிரமணியபுரம் கிராமத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
இப் பகுதி மக்கள் அரிசி, பருப்பு உள்ளிட்ட குடிமைப் பொருள்களை வாங்குவதற்கு சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள நியாயவிலைக்கடைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், இந்த கிராமத்திலேயே 2010-2011-ஆம் ஆண்டு தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பொது விநியோகக் கடை கட்டப்பட்டது.  இந்தக் கட்டடம் கட்டப்பட்டு 8 ஆண்டு காலமாகியும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால் அரசின் பணம் விரயமாவதுடன், கிராம மக்களின் அவதியும் தொடர்கிறது. எனவே, இந்த பொது விநியோகக் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com