கள்ளக்குறிச்சி பகுதிகளில் சுதந்திர தின விழா

கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில்

கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் 73-ஆவது சுதந்திர தின விழா வியாழக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அரசுப் பள்ளிகளில்: தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கடந்த ஆண்டு 10, 11, 12 -ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவரும், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவருமான வெ.அய்யப்பா தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினார். பள்ளித் தலைமை ஆசிரியர் பூ.சசி வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அ.பிரபு தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினார். பள்ளித் தலைமை ஆசிரியர் ப.ராமச்சந்திரன் வரவேற்றார்.
இதேபோல, கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அ.பிரபு எம்எல்ஏ தேசியக் கொடியேற்றினார். பள்ளித் தலைமை ஆசிரியை மார்கிரேட் வரவேற்றார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் பி.எஸ்.கே.ஷியாம்சுந்தர் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினார். பள்ளித் தலைமை ஆசிரியர் சைமன் ராயப்பன் வரவேற்றார். 
கல்லூரிகளில்: கள்ளக்குறிச்சியை அடுத்த மேலூர் டி.எஸ்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி நிறுவனர் கு.தேஜ்ராஜ் சுராணா தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். கல்லூரித் தலைவர் தே.மனோகர் குமார் சுராணா, செயலர் 
தே.அசோக் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஸ்ரீமதி வரவேற்றார். கடந்தாண்டு அண்ணா பல்கலைக் கழகத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், விடுப்பு எடுக்காமல் வருகை புரிந்த மாணவர்களுக்கும் கல்லூரி செயலர் 
தே.அசோக்குமார் பரிசுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி பங்காரம் பகுதியில் உள்ள இந்திலி ஆர்.கே.எஸ். கல்வி நிறுவனங்களில் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் க.மகுடமுடி தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினார். கல்லூரித் துணைத் தலைவர் தே.மணிவண்ணன், செயலர் என்.கோவிந்தராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் (பொ) கு.மோகனசுந்தர் வரவேற்றார்.
பங்காரம் ஸ்ரீலட்சுமி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். செயலர் முருகப்பன், இயக்குநர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் வீரமணி வரவேற்றார். பங்காரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் அண்ணாதுரை தேசியக் கொடியேற்றினார்.
அரசு அலுவலகங்களில்: கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார்- ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தேசியக் கொடியேற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினார். நேர்முக உதவியாளர் ஆர்.இரா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். இதேபோல, கள்ளக்குறிச்சி கிளைச் சிறைச் சாலையில் சிறைவாசிகளுக்கு சார்- ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இனிப்புகளை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.சுமதி தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினார். கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் பூ.தயாளன் கொடியேற்றினார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாண்டி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் 
அ.வ.சையத் முஸ்தபா கமால் தலைமை வகித்து, கொடியேற்றினார். மேலாளர் ப.முகமது ரபியுல்லா, நகர அமைப்பு ஆய்வாளர் கி.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், கள்ளக்குறிச்சி காவல் நிலையம் உள்ளிட்ட இரு இடங்களில் காவல் ஆய்வாளர் தங்க.விஜயகுமார் தேசியக் கொடியேற்றினார்.
கூட்டுறவு சர்க்கரை ஆலையில்: கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்க்ரை இணையம் மற்றும் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் எ.எஸ்.ஏ.ராஜசேகர் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினார். துணைத் தலைவர் எம்.பாபு முன்னிலை வகித்தார். மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் இனிப்புகளை வழங்கினார்.
தமிழ்ச் சங்கங்கள் சார்பில்: 
தியாகதுருகம் ஒளவையார் தமிழ்ச் சங்கம், கல்வராயன் மலைத் தமிழ்ச் சங்கம், சின்னசேலம் தமிழ்ச் சங்கம் ஆகியவை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு பாவலர் மலரடியான் தலைமை வகித்தார். ஒளவை கல்யாணி, ஏ.ம.சீனிவசான், கவிதைத்தம்பி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முனைவர் தெ.சாந்தகுமார் வரவேற்றார். 
அறிவழகன், ராஜேந்திரன், கு.சாந்தி, சுமேஷ், மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர். செல்வி ஜீவபிரியா நடனம் ஆடினார். செல்வி கவிபிரியா கவிதை வாசித்தார். கவிஞர் மாரிகண்ணதாசன் நன்றி கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com