Enable Javscript for better performance
ஆயுர்வேத மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் சாலாமேடு என்ஜிசிஓ நகர் மனவளக் கலை மன்ற அறக்கட்டளை, விழுப்புரம் தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவமனை ஆகியவை சார்பில் ஆயுர்வேத மருத்துவ முகாம்,  விழுப்புரம் சுதாகர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவர் பி.நடராஜன் தலைமை வகித்தார். செயலர் ஆர்.லட்சுமிஜோதி, பொருளர் பி.புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை அறங்காவலர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆயுர்வேத மருத்துவர் எம்.தேவி தலைமையிலான குழுவினர், முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி, பரிசோதனைகள் செய்து சிகிச்சையளித்தனர். முகாமில்,  பங்கேற்றவர்களுக்கு சிகிச்சையும்,  அதற்கான மருந்து,  மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai