Enable Javscript for better performance
விஜயகாந்த் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரத்தில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை வறுமை ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசன் தலைமை வகித்து, விழுப்புரம், வி.மருதூர், சாலாமேடு, சின்னப்பா நகர்(26-ஆவது வார்டு) ஆகிய பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    நகரச் செயலர் மணிகண்டன், நகரத் தொண்டர் அணிச் செயலர் ஆனந்தன், மாவட்டப் பொருளர் தயாநிதி, நகரப் பொருளர் சுபாஷ், மாவட்ட தொண்டர் அணி துணைச் செயலர் கே.ஜி.சிவா, மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலர் சீனு, நகரத் தலைவர் டி.கே. சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai