தியாகதுருகம் ஒன்றியத்தில் குடிமராமத்துப் பணி: எம்எல்ஏ தொடக்கி வைத்தார்

தியாகதுருகம் ஒன்றியத்தில் தென்னேரிகுப்பம், திம்மலை, மேல்வழி, வடதொரசலூர் பகுதிகளுக்கான குடிமராமத்து

தியாகதுருகம் ஒன்றியத்தில் தென்னேரிகுப்பம், திம்மலை, மேல்வழி, வடதொரசலூர் பகுதிகளுக்கான குடிமராமத்து பணியை கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அ.பிரபு வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். 
தமிழக அரசு சார்பில் தியாகதுருகம் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளில் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் 24 ஏரிகள், 90 குளங்களை சுமார் ரூ.2.16 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணியை எம்எல்ஏ அ.பிரபு தொடக்கி வைத்தார். 
இதேபோல, தென்னேரிகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி தலைமை வகித்தார். அதிமுக ஒன்றியச் செயலர் வெ.அய்யப்பா, நகரச் செயலர் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் ஜான்பாஷா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அ.பிரபு பங்கேற்று ரூ. 5 லட்சம் மதிப்பில் நடைபெறும் ஏரி குடிமராமத்து பணியை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் குமரவேல், குமாரசாமி, தமிழரசி குமரவேல் உதவி பொறியாளர்கள் அசோக்நாத், கோமதி, ஜெயந்தி, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, திம்மலை, மேல்விழி, வடதொரசலூர் உள்ளிட்ட கிராமங்களிலும் திட்டப் பணியை எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com