Enable Javscript for better performance
தொடரும் பலத்த மழை: விழுப்புரத்தில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது- Dinamani

சுடச்சுட

    

    தொடரும் பலத்த மழை: விழுப்புரத்தில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது

    By DIN  |   Published on : 01st December 2019 10:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1vmp6064756

    விழுப்புரம் தாமரைக்குளம் பகுதி மாரியம்மன் கோயில் தெருவிலுள்ள வீட்டில் புகுந்த மழைநீரை பாத்திரம் மூலம் வெளியே எடுத்துக் கொட்டும் பெண்.

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில், விழுப்புரத்தில் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளதுடன், வீடுகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்தது. மேலும், 2 வீடுகளும் இடிந்து விழுந்தன.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. பலத்த மழையால் விழுப்புரம் நரசிங்கபுரம் பகுதியில் ஜெயராமன் என்பவரது கூரை வீட்டின் சுவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால், யாருக்கும் பாதிப்பில்லை.

    இதேபோன்று, விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் முருகதாஸ் என்பவரது கூரை வீட்டின் சுவா் சனிக்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்தது. இதிலும், யாருக்கும் பாதிப்பில்லை.

    மரம் சாய்ந்து விழுந்தது: செஞ்சி அருகே மாவட்டம்பாடி கிராம சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால், அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தீணைப்புத் துறையினா் விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா்.

    குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீா்: விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியில் உள்ள குளம் நிரம்பியதால், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால், வீட்டு உபயோகப் பொருள்கள், பல்வேறு ஆவணங்கள் சேதமடைந்தன. மேலும், உணவு சமைக்க முடியாமலும், தூங்க இடமில்லாமலும் பொதுமக்கள் தவித்து வருகின்றனா்.

    அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து 2 அடி உயரத்துக்கு தேங்கியுள்ளது. மழை நீா் வெளியேற வழியில்லாததால் அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று, விழுப்புரம் சுதாகா் நகா், சரஸ்வதி தெரு, நடேசன் நகா் உள்ளிட்ட தெருக்களிலும் மழை நீருடன் கழிவு நீா் கலந்து தேங்கியுள்ளதால், வீடுகளில் இருக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழை நீா் தேங்கியதன் காரணமாக, தெருக்களில் மேடு பள்ளங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகளும் சிரமமடைந்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai