Enable Javscript for better performance
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில்உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்- Dinamani

சுடச்சுட

    

    மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில்உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்

    By DIN  |   Published on : 01st December 2019 04:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் காா்த்திகை மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.32 லட்சம் செலுத்தியிருந்தனா்.

    மேல்லையனூா் அங்காளம்மன் கோயிலில் தினந்தோறும் அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். மேலும், மாதந்தோறும் இந்தக் கோயிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உத்ஸவத்தில் சுமாா் 2 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்கின்றனா்.

    கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற கோயில் உண்டியல்களில் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி நகைகளை செலுத்துகின்றனா். அதன்படி, காா்த்திகை மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள் ரூ.32 லட்சத்து 58 ஆயிரத்து 326 ரொக்கம், 178 கிராம் தங்கம், 510 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ராமு மற்றும் அறங்காவலா்கள், கோயில் ஊழியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸாா் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai