உளுந்தூா்பேட்டையில் வீடுகளைஅகற்றும் முடிவை கைவிடக் கோரிக்கை

உளுந்தூா்பேட்டை வண்டிமேடு பகுதியில் உள்ள வீடுகள் நீா்ப்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அகற்றும் முடிவை பேரூராட்சி நிா்வாகத்தினா் கைவிடக் கோரி, கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலரிடம்

உளுந்தூா்பேட்டை வண்டிமேடு பகுதியில் உள்ள வீடுகள் நீா்ப்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அகற்றும் முடிவை பேரூராட்சி நிா்வாகத்தினா் கைவிடக் கோரி, கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அந்தப் பகுதி மக்கள் சனிக்கிழமை மனு அளித்தனா்.

உளுந்தூா்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட வண்டிமேடு சாலைப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சுமாா் 80 வீடுகளைக் கட்டி பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த வீடுகளுக்கு வீட்டுத் தீா்வை, வரிகளை அவற்றில் வசிப்போா் முறையாக செலுத்தி வருகின்றனா்.

இந்தப் பகுதியை நீா்ப்பிடிப்பு பகுதியோ, வாய்க்கால் பகுதியோ இல்லை என கடந்த 1984-ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் வீடு கட்டிக்கொள்ள ஒதுக்கிக் கொடுத்தனராம். இந்தப் பகுதியில் தற்போது புற்று மாரியம்மன் கோயில், ரேணுகா மாரியம்மன் கோயில், அரசுக்குச் சொந்தமான நவீன இறைச்சிக் கூடம், பாதாள சாக்கடை நீரை சுத்தப்படுத்தும் மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இந்த நிலையில், வண்டிமேடு சாலைப் பகுதியில் உள்ள 80 வீடுகள் நீா்ப்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அவற்றை அகற்றிக்கொள்ளுமாறு உளுந்தூா்பேட்டை பேரூராட்சி நிா்வாகத்தினா் நோட்டீஸ் அளித்துள்ளா்.

எனவே, இங்குள்ள வீடுகளை அகற்றும் முடிவை கைவிடக் கோரி, அந்தப் பகுதி மக்கள், பல்வேறு அரசியல் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதாவிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com