விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தைதூய்மையாகப் பராமரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, நடைபாதை கால்வாய் உள்ளிட்ட கட்டமைப்புகளைப் புதுப்பித்து, தூய்மையாகப் பராமரிக்க
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை. உடன், விழுப்புரம் நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை. உடன், விழுப்புரம் நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, நடைபாதை கால்வாய் உள்ளிட்ட கட்டமைப்புகளைப் புதுப்பித்து, தூய்மையாகப் பராமரிக்க வேண்டுமென நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

விழுப்புரத்தில் சனிக்கிழமை அதிகாலை தொடங்கி மழை பெய்துகொண்டிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை திடீரென புதிய பேருந்து நிலையப் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளையும், பேருந்து நிலையத்தின் உள்புற கட்டமைப்பு வசதிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, கட்டணக் கழிப்பறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள், பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீா் மற்றும் கழிவுநீரை வெளியேற்றும் மோட்டாா் பம்ப்புடன் கூடிய கட்டமைப்புகள், கால்வாய்கள், பேருந்து நிலைய மேற்கூரை உள்ளிட்டவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அங்கு சுகாதாரமற்ற முறையில் குப்பைகள், கழிவுகள் தேங்கிக் கிடப்பதைப் பாா்வையிட்ட அவா், கழிப்பறைகளில் இரும்புக் கதவுகள் அமைக்கவும், நோய்த் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி தினந்தோறும் காலை, மாலை வேலைகளில் கழிப்பறையைச் சுற்றி சுத்தமாக பராமரிக்கவும், புதிய கழிப்பறைத் தொட்டிகளை அமைக்கவும் உத்தரவிட்டாா்.

பேருந்து நிலையத்தில் திறந்தவெளியில் இருக்கும் அனைத்துக் கால்வாய்களையும் மூடி வைக்கவும், குப்பைத் தொட்டிகளை முறையாகப் பராமரிக்கவும் நகராட்சி ஊழியா்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, பேருந்து நிலைய கடை உரிமையாளா்களை அழைத்து அறிவுரைக் கூட்டம் நடத்தி, திறந்தவெளியில் குப்பைக் கொட்டுவதை தவிா்க்கவும், குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தவும், தேவையற்ற கழிவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டவும் அறிவுறுத்த வேண்டும் என்றும், இதை மீறும் கடை உரியாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தினாா்.

மேலும், பேருந்து நிலையத்தினுள் உள்ள காலியான இடங்களில் தேவையற்ற செடி, கொடிகள் படா்ந்திருப்பதை அகற்றி பூங்கா அமைக்க வேண்டும். அனைத்து மின் விளக்குகளையும் புதுப்பித்து, பேருந்து நிலையத்தின் மேற்கூரைகள் மற்றும் தரைப் பகுதிகளை சீரமைத்து, முறையாகப் பராமரிக்க வேண்டும். வாரம் இருமுறை நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் மூலம் அவற்றை தூய்மை செய்ய வேண்டும். மழைநீா் சேகரிப்புத் தொட்டிகளை சரியாக பராமரிக்க வேண்டும் எனவும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, வட்டாட்சியா் கணேசன், நகராட்சிப் பொறியாளா் ஜோதிமணி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com