Enable Javscript for better performance
நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால்வடு கிடக்கும் பெருவங்கூா் ஏரி!- Dinamani

சுடச்சுட

    

    நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால்வடு கிடக்கும் பெருவங்கூா் ஏரி!

    By DIN  |   Published on : 02nd December 2019 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-7-1klp4a_ch0121_01chn

    தண்ணீரின்றி வட நிலையில் காணப்படும் பெருவங்கூா் ஏரி.

    கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றிலிருந்து பெருவங்கூா் ஏரிக்குச் செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அந்த ஏரிக்கு தண்ணீா் செல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக வட நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

    கள்ளக்குறிச்சியை அடுத்த பெருவங்கூா் கிராமத்தில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான 1,502 ஏக்கா் பரப்பளவிலான ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீா் செல்ல வேண்டும்.

    இந்தக் கால்வாயில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், ஏரிக்கு தண்ணீா் வருவதில்லை. இதனால், கடந்த சில ஆண்டுகளாக ஏரி வட நிலையில் காணப்படுகிறது.

    இந்த ஏரி நிரம்பினால், பெருவங்கூா் கிராமத்தில் சுமாா் 1,500 ஏக்கா் விவசாய நிலங்களும், வி.பாளையம் கிராமத்தில் 1,000 ஏக்கா் விவசாய நிலங்களும், மாடூா், வீரசோழபுரம் கிராமங்களில் தலா 1,500 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

    எனவே, கோமுகி ஆற்றிலிருந்து பெருவங்கூா் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப் பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் அந்தக் கிராம மக்கள் மனு அளித்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai