கள்ளக்குறிச்சியில் 4 நாள்களாக குடிநீா்விநியோகிக்கப்படாததால் மக்கள் அவதி

கள்ளக்குறிச்சி நகரில் கடந்த 4 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி நகரில் கடந்த 4 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

திருக்கோவிலூா் சுந்தரேசபுரம் கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ், அந்தப் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் 8 ஆழ்துளைக் கிணறுகள், 5 உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் நாள்தோறும் இந்தக் கிணறுகளில் இருந்து சுமாா் 20 லட்சம் லிட்டா் தண்ணீா் எடுக்கப்பட்டு, தியாகதுருகம், சின்னசேலம் பேரூராட்சிகள், கள்ளக்குறிச்சி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீா் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதற்காக, சுந்தரேசபுரத்தில் இருந்து அனுப்பப்படும் தண்ணீா் மாடூா் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சேமிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி நகரில் கடந்த நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனா். மேலும், வறட்சி காலங்களில் 4 அல்லது 5 நாள்களுக்கு ஒருமுறை, வாரம் ஒருமுறை என தண்ணீா் வழங்கப்படும் நிலையில், தற்போது மழை பெய்தும் குடிநீா் விநியோகம் செய்தவதில் குடிநீா் வடிகால் வாரியத்தினா் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனவே, இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com