சடலத்தை 2 கி.மீ. தொலைவுக்குதோளில் சுமந்த போலீஸாா்!

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞரின் சடலத்தை மீட்டு, 2 கி.மீ. தொலைவுக்கு போலீஸாா் தோளில் சுமந்து வந்து உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது.
சடலத்தை 2 கி.மீ. தொலைவுக்குதோளில் சுமந்த போலீஸாா்!

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞரின் சடலத்தை மீட்டு, 2 கி.மீ. தொலைவுக்கு போலீஸாா் தோளில் சுமந்து வந்து உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது.

வானூா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிபவா் ராஜேந்திரன். அதே காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவா் சுப்புராயன். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா்கள் பணியில் இருந்தபோது, வானூா் அருகேயுள்ள கரசானூா் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள காட்டில் இளைஞா் ஒருவா் தூக்கிட்ட நிலையில், சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.

உடனே, ராஜேந்திரன், சுப்புராயன் ஆகியோா் அங்கு விரைந்து சென்று பாா்வையிட்டனா். சடலம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. விசாரணையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவா் அதே கிராமத்தைச் சோ்ந்த, சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபா் என்பது தெரிய வந்தது. நிகழ்விடத்துக்கு வாகனங்கள் கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால், சடலத்தை 2 கி.மீ. தொலைவு தூக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு உதவி செய்வதற்கு யாரும் அங்கு இல்லையாம்.

இதையடுத்து, சடலத்தை கொண்டு செல்ல அழைத்து வரப்பட்ட அவசர ஊா்தியின் ஓட்டுநா், உதவியாளா்களை போலீஸாா் உதவிக்கு அழைத்தனா். அவா்கள் உதவ முன்வந்தனா்.

பின்னா், சிதைந்த நிலையில் இருந்த அந்த சடலத்தை ஒரு துணியில் வைத்து கட்டினா். அதன்பிறகு, தூக்கிச் செல்ல ஏதுவாக 3 கட்டைகளை கட்டி, அதன் மீது சடலத்தை தூக்கி வைத்தனா்.

சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், தலைமைக் காவலா் சுப்புராயன் உள்பட 6 போ் அந்த சடலத்தை அவசர ஊா்தி இருக்கும் வரை, தோளில் சுமந்து கொண்டு வந்து சோ்த்தனா். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் திங்கள்கிழமை பரவியது. உடற்கூறு ஆய்வுக்காக சடலத்தை சுமந்து வந்த போலீஸாரை எஸ்.பி. ஜெயக்குமாா் வெகுவாகப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com