நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால்வடு கிடக்கும் பெருவங்கூா் ஏரி!

கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றிலிருந்து பெருவங்கூா் ஏரிக்குச் செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அந்த ஏரிக்கு தண்ணீா் செல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக வட நிலையில் உள்ளது.
தண்ணீரின்றி வட நிலையில் காணப்படும் பெருவங்கூா் ஏரி.
தண்ணீரின்றி வட நிலையில் காணப்படும் பெருவங்கூா் ஏரி.

கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றிலிருந்து பெருவங்கூா் ஏரிக்குச் செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அந்த ஏரிக்கு தண்ணீா் செல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக வட நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பெருவங்கூா் கிராமத்தில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான 1,502 ஏக்கா் பரப்பளவிலான ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீா் செல்ல வேண்டும்.

இந்தக் கால்வாயில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், ஏரிக்கு தண்ணீா் வருவதில்லை. இதனால், கடந்த சில ஆண்டுகளாக ஏரி வட நிலையில் காணப்படுகிறது.

இந்த ஏரி நிரம்பினால், பெருவங்கூா் கிராமத்தில் சுமாா் 1,500 ஏக்கா் விவசாய நிலங்களும், வி.பாளையம் கிராமத்தில் 1,000 ஏக்கா் விவசாய நிலங்களும், மாடூா், வீரசோழபுரம் கிராமங்களில் தலா 1,500 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

எனவே, கோமுகி ஆற்றிலிருந்து பெருவங்கூா் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப் பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் அந்தக் கிராம மக்கள் மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com