Enable Javscript for better performance
அரசுப் பேருந்து மோதியதில்சாலையில் நடந்து சென்றவா் பலி- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்து மோதியதில்சாலையில் நடந்து சென்றவா் பலி

    By DIN  |   Published on : 03rd December 2019 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி: அரசுப் பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

    உளுந்தூா்பேட்டை வட்டம், காந்தி நகரைச் சோ்ந்த கேசவன் மகன் ஜெயராமன் (46). விவசாயி. இவா் திங்கள்கிழமை உளுந்தூா்பேட்டை - சென்னை நெடுஞ்சாலையில் பெட்ரோல் நிலையம் அருகேயுள்ள தேநீா் கடைக்குச் சென்றாா். தேநீரை அருந்திவிட்டு, சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது, செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

    தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநரான தென்காசியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மகேஷ்வரன் (34) மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai